ADVERTISEMENT

கனாடவில் அவசர சட்டம் அமல் - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவு!

10:47 AM Feb 15, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, கனடா எல்லையை கடக்கும் லாரி ஒட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திகொள்ளவேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக லாரி ஒட்டுநர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு கட்டாய தடுப்பூசி விதிக்கு எதிரானவர்கள் ஆதரவளிக்கவே போரட்டம் வலுத்தது.

இதன் தொடர்ச்சியாக லாரி ஓட்டுனர்களும், அவர்களது ஆதரவாளர்களும் நாட்டின் தலைநகரிலும், எல்லைகளிலும் சாலைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கனடாவின் பொருளாதரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாட்டில் அவசர சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.

லாரி ஒட்டுநர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, மகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க இந்த அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போரட்டம் நடத்தும் லாரி ஒட்டுனர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், அவர்களின் தனிப்பட்ட மற்றும் கார்ப்பரேட் வங்கி கணக்குகள் முடக்கப்படும், அவர்களின் இன்சூரன்ஸ் நிறுத்தி வைக்கப்படும் என கனடா அரசு எச்சரித்துள்ளது. மேலும் லாரி ஒட்டுநர்களின் போரட்டத்தை ஆதரிக்கும் க்ரவுட் பண்டிங் இணையதளங்கள் மீது பணமோசடி தடுப்பு விதிகளின் மீது பணமோசடி தடுப்பு விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்தநாட்டு அரசு கூறியுள்ளது.

அதேநேரத்தில் ஜஸ்டின் ட்ரூடோ, போரட்டத்தை ஒடுக்க தற்போதைய நிலையில் ராணுவம் குவிக்கப்படாது என தெரிவித்துள்ளார். கனடாவில் போர் நடைப்பெறாத காலகட்டத்தில் அந்தநாட்டில் அவசர சட்டம் அமல்படுத்தப்படுவது இது இராண்டவது முறையாகும். இதற்கு முன்னதாக ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தையும், அந்நாட்டு முன்னாள் பிரதமருமான பியர் ட்ரூடோ, 1970 ஆம் ஆண்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT