ADVERTISEMENT

நாடாளுமன்றத்தை கலைத்த ஜஸ்டின் ட்ரூடோ...

11:53 AM Sep 13, 2019 | kirubahar@nakk…

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கனடா நாட்டின் பிரதமராக பதவி வகித்துவந்த ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார் ஜஸ்டின். திறமை வாய்ந்த அமைச்சரவை, புதிய திட்டங்கள் என மக்களிடையே நன்மதிப்பை பெற்றாலும், ஊழல்குற்றச்சாட்டு, காலிஸ்தான் பிரச்சனையில் அவரது நிலைப்பாடு உள்ளிட்டவை, அந்நாட்டு மக்களிடையே அவரது செல்வாக்கை குறைத்தது.

மேலும் பதவியேற்ற போது தனது அமைச்சகத்தில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவேன் என்று அவர் தெரிவித்த நிலையில் அவரது அமைச்சகத்திலிருந்து இரண்டு பெண்களை நீக்கி இருப்பது சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கனடா நாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை அறிவித்தார். இதற்கு கவர்னர் ஜெனரல் ஜூலியும் ஒப்புதல் வழங்கினார்.

பின்னர் இதுகுறித்து பேசிய ஜஸ்டின், "கனடாவில் வரும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. நாங்கள் கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்காக நிறைய செய்திருக்கிறோம்” என்றார். ஏற்கனவே, ஜஸ்டின் ஆட்சியை நடத்த தேவையான பெரும்பான்மை இல்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது அவர் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT