ஈரானில் விமானத்தை சுட்டது யார்..? ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு கருத்து....

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து 176 பேருடன் புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 176 பேரும் பலியாகினர்.

justin trudeau about iran flight crash

புதன்கிழமை காலை டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதில் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் 60 பேர். தொழில் நுட்ப காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது தாக்கப்பட்டதா? என விசாரணை நடந்து வரும் நிலையில், ஈரான் படையினரே தவறுதலாக இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்நிலையில் இந்த விமானத்தின் கருப்பு பெட்டியை ஈரான் ஆராய்ச்சி செய்து வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கனடா பிரதமர், ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் தான் உக்ரைன் விமான விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளார். பல்வேறு உளவுத்துறை தகவல்கள் மூலம் நமக்கு கிடைத்த செய்திகளை வைத்து பார்க்கும் போது, உக்ரைன் விமானம் ஈரானின் ஏவுகணையால் தான் சுடப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த விமான விபத்துக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா தெரிவித்து வரும் நிலையில், கனடா பிரதமரும் தற்போது இதனை தெரிவித்துள்ளார்.

America Canada iran Justin Trudeau
இதையும் படியுங்கள்
Subscribe