அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மூத்த மகன் டொனால்டு ட்ரம்ப் ஜூனியர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கரோனா தொற்று இதுவரை 1.2 கோடி பேரை பாதித்துள்ளது. இதில் 2.6 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மூத்த மகன் டொனால்டு ட்ரம்ப் ஜூனியர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இன்றி அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், இவர்களது இளைய மகன் பாரன் ட்ரம்ப் ஆகியோர் தொற்று பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்த நிலையில், தற்போது இந்த குடும்பத்தில் நான்காவதாக ட்ரம்ப் ஜூனியருக்கு கரோனா தோற்று ஏற்பட்டுள்ளது.