ADVERTISEMENT

"ரஷ்யர்கள் கடுமையான உயிரிழப்புகளைச் சந்திப்பார்கள்" - புதினுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை!

05:29 PM Jan 20, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்ததையொட்டி, ஜோ பைடன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பதிலளித்தார். ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றம் குறித்து பேசிய ஜோ பைடன், ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் என நம்புவதாகவும், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அதற்கான கடுமையான விலையை புதின் அளிப்பார் என்றும், உக்ரைன் மீது படையெடுத்தால் அதற்காக புதின் வருந்துவார் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் மீது படையெடுப்பு நடக்கும்பட்சத்தில், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ரஷ்யாவிற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்த தயாராகவுள்ளதாகவும் கூறியுள்ள ஜோ பைடன், "உக்ரேனுக்கு 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை ஏற்கனவே அனுப்பியுள்ளேன். உக்ரைன் மீது படையெடுத்தால், ரஷ்யர்கள் கடுமையான உயிரிழப்புகளைச் சந்திப்பார்கள்" எனவும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெற்றது குறித்து பேசிய ஜோ பைடன், "நான் செய்தது குறித்து மன்னிப்பு கேட்கமாட்டேன். நாங்கள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தால், 20,000 முதல் 50,000 வீரர்களை மீண்டும் அங்கே வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருப்போம். தலிபான்களின் திறமையின்மையால் அங்கு நடப்பது குறித்து வருந்துகிறேனா என்றால் ஆம் நான் வருந்துகிறேன்" என கூறியுள்ளார்.

மேலும் ஜோ பைடன் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில், கமலா ஹாரிஸ் தன்னுடன் சேர்ந்து துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் எனவும் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT