joe biden

Advertisment

கடந்த வருடம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன்அமெரிக்காவின் புதிய அதிபராகதேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு சர்ச்சைகளுக்கும் கலவரங்களுக்கும் மத்தியில் அமெரிக்கநாடாளுமன்றம் சமீபத்தில் ஜோபைடனின்வெற்றியைஉறுதி செய்தது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் 46வது அதிபராகஜோபைடன்இன்று (20.01.2021) பதவியேற்கிறார். இந்தியநேரப்படிஇன்று இரவு 8.30 மணிக்குஜோபைடன்பதவியேற்கும் விழா தொடங்க இருக்கிறது. அதிக வயதில் அமெரிக்கஅதிபராக பதவி ஏற்கும்நபர் என்ற பெருமையையும் ஜோபைடன்இன்று பெறவுள்ளார்.

capitol america

Advertisment

இன்று புதிய அமெரிக்க அதிபர் பதவியேற்கவுள்ளதையடுத்து, அமெரிக்காநாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவிற்கு நேரில் வரவேண்டாம்எனஅமெரிக்கமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். பொதுவாக அமெரிக்க அதிபர் பதவியேற்புவிழாவில்மக்கள் திரளாக கலந்துகொள்வது வழக்கம். ஆனால் கரோனாபரவல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முறை அதிக அளவில் மக்கள் கூடுவதுதடைசெய்யப்பட்டுள்ளதால், அமெரிக்க மக்கள் சார்பாக1,91,500 அமெரிக்க கொடிகள்பல்வேறு அளவுகளில்அமெரிக்கநாடாளுமன்றம் முன்பு நடப்பட்டுள்ளது. கண்ணைக் கவரும் வகையில்நடப்பட்டுள்ள இக்கொடிகள் அனைவரின்கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.