joe biden

Advertisment

உலகம் முழுவதும் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதேநேரத்தில் பல்வேறு நாடுகளில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல ஏழைநாடுகள் தடுப்பூசி வாங்க முடியாமல் திணறிவருகின்றன. அமெரிக்கா ஏற்கனவே 8 கோடி தடுப்பூசிகளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளஇருப்பதாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில், ஏழை நாடுகளுக்கு உதவும் வகையில், 50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "அமெரிக்கா அரை பில்லியன் புதிய ஃபைசர் தடுப்பூசிகளை வாங்கி, உலகின் 92 குறைந்த மற்றும் குறைந்த நடுத்தரமானவருமானத்தைக் கொண்ட நாடுகளுக்கு நன்கொடையாக அளிக்கும்" என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்த வரலாற்று நடவடிக்கை கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் கோவாக்ஸ்திட்டத்தின் கீழ், தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வாங்கிவருவது குறிப்பிடத்தக்கது.