2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றுஅமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பைடன்பதவி ஏற்றார். அதேபோல் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸும் துணை அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் தொலைக்காட்சி ஒன்றில் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது. கமலா ஹாரிஸும் துணை அதிபராக போட்டியிட இருப்பதாகதகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை என ஜோ பைடன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.