Advertisment

சீனாவுக்கு எதிராக அதிரடி காட்டும் பைடன்!

Xi Jinping - joe biden

அமெரிக்கவின் புதிய அதிபராகபதவியேற்றுள்ள ஜோபைடன், சீனஅதிபர்ஜின்பிங்கோடு தொலைபேசி வாயிலாக உரையாடினார். ஜோபைடன், சீனா தொடர்பான விவகாரங்களைக் கையாளுவதற்காக பாதுகாப்பு செயற்குழு ஒன்றைஅமைத்த சிலமணி நேரங்களுக்குப் பிறகு இந்த உரையாடல் நடைபெற்றது.

Advertisment

சீன அதிபருடனான உரையாடலின்போது, சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைகள், ஹாங்காங் ஒடுக்குமுறை, சின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்கள், தைவான் பிரச்சனை உள்ளிட்டவை குறித்ததனது கவலையை ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதேபோல், சீனாமற்றும் அமெரிக்காவிற்கும் இடையேயான மோதல், இரு நாடுகளுக்கும் அழிவை ஏற்படுத்தும் எனவும், சீனஇறையாண்மை தொடர்பான விஷயங்கள் என்பதால், ஹாங்காங், சின்ஜியாங், தைவான்பிரச்சனைகளை அமெரிக்காகவனமாகக் கையாளும் என நம்புவதாக சீனஅதிபர் கூறியதாக சீனஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இரு நாட்டுத் தலைவர்களும் கரோனாபரவல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளனர்.

சீனாவைக் கையாளபுதிய குழு, அந்த நாட்டுஅதிபருடன் நேரடி உரையாடல் என சீனாவிற்கெதிராக அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் பைடன். அதேநேரம் இருவருக்குமிடையேயான உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Joe Biden xi jinping
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe