Advertisment

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஜோ பைடன்!

JOE BIDEN

தெற்காசியாவில் உள்ள இந்தியா, மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள், இந்த வாரத்தில் புத்தாண்டைக்கொண்டாடுகின்றன. இந்தியாவில் நேற்று (13.04.2021) தெலுங்கு, பஞ்சாப் மக்கள் புத்தாண்டைக் கொண்டாடினர். இன்று தமிழக, கேரள மக்கள் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். இதனையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாகதனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்த வாரம் வைசாக்கி, நவராத்திரி, சாங்க்கிரான் மற்றும் வரவிருக்கும் புத்தாண்டைக் கொண்டாடும்தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய சமூகங்களுக்கு ஜில்லும் (ஜோ பைடன் மனைவி), நானும் எங்களது அன்பான வாழ்த்துகளைஅனுப்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் அவர், "இனிய பெங்காலி, கம்போடியன், லாவோ, மியான்மரீஸ், நேபாளி, சிங்கள, தமிழ், தாய், விஷு புத்தாண்டு வாழ்த்துகள்" எனவும் கூறியுள்ளார்.

tamil new year Joe Biden
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe