JOE BIDEN

கரோனாதொற்றால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. இதுவரை அந்தநாட்டில்2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால்உயிரிழந்துள்ளனர். கரோனாபாதிப்பு, அதனைத் தொடர்ந்தபோடப்பட்ட ஊரடங்கால், பலர் வேலை இழந்தனர். பல்வேறு தொழில்கள் முடங்கின. இதனால்பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கரோனாவால்பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், 1.9 ட்ரில்லியன்டாலர் மதிப்பிலான நிவாரண மசோதா, அமெரிக்காவின் செனட்டில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 1.9 ட்ரில்லியன்டாலர் என்பது இந்திய மதிப்பில் 138 லட்சம் கோடி ஆகும் .

Advertisment

இந்தநிலையில், அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன், அந்த புதிய மசோதாவிற்குஒப்புதல் அளித்துள்ளார். இதனால், பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு 1,400 டாலர், நிவாரணமாக கிடைக்கும். இது இந்திய மதிப்பில் ஒரு லட்சத்திற்கு அதிகமான தொகையாகும்.

இரண்டு உலகப்போர்கள், வியட்நாம் போர், இரட்டைக் கோபுர தாக்குதல் ஆகிய மூன்றிலும் உயிரிழந்தவர்களைவிடஅதிக அமெரிக்கர்கள், கரோனாவால்உயிரிழந்துள்ளதாகஜோ பைடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment