Advertisment

போரை தவிர்க்க இறுதி முயற்சியில் பிரான்ஸ் - புதினை சந்திக்க நிபந்தனையுடன் ஒப்புக்கொண்ட பைடன்!

joe biden

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வரும் நிலையில், அண்மையில் ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்தது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் எனக் கருதப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், கிழக்கு ஐரோப்பாவிற்குப் படைகளையும், போர்க் கப்பல்களையும் அனுப்பியது.

Advertisment

இதனால் போர் பதற்றம் அதிகரித்தநிலையில், ரஷ்யா, உக்ரைன் எல்லையில் உள்ள படைகளைக் குறைப்பதாக அறிவித்தது. ஆனால் அமெரிக்காவோ ரஷ்யா படைகளை குறைக்காமல் அதிகரித்திருப்பதாகவும், உக்ரைன் மீது படையெடுக்கக் காரணத்தை உருவாக்க முயல்வதாகவும், ரஷ்யா படைகள் போருக்குத் தயாராகி வருவதாகவும் குற்றஞ்சாட்டியது.

Advertisment

இந்தச்சூழலில் ரஷ்யா ஆதரவு பெற்ற உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளில் உக்ரைன் அரசுப்படைகள், குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டினர். உக்ரைன் அரசோ தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியின் மீது கிளர்ச்சியாளர்கள், பீரங்கி மூலமும், மோட்டார் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டியது. அதேசமயம் ரஷ்யா, புதின் மேற்பார்வையில் இராணுவ பயிற்சி நடைபெறவுள்ளதாக அறிவித்தது.

இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் புதினை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் ரஷ்யா இதற்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை. இந்தச்சூழலில் உக்ரைன் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கும், ரஷ்ய ஆதரவுப் பெற்ற கிளர்ச்சியாளர்களின் பகுதிகளையும் பிரிக்கும் எல்லை கோடுகளில் மோதல் அதிகரித்துள்ளன. தங்கள் பகுதிகளில் அரசு தாக்குதல் நடத்துவதாக கிளர்ச்சியாளர்களும், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையே ரஷ்ய பீரங்கிகள் z என்ற குறியீட்டோடு உக்ரைன் எல்லைக்கு விரைவதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் நாட்டு பீரங்கிகளை தாங்களே தாக்காமல் இருக்க ரஷ்யா இந்த z என்ற குறியீட்டை பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் போர் பதற்றம் அதிகரித்தநிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் புதினை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு போரை தவிர்ப்பது குறித்து பேசினார். அதனைத்தொடர்ந்து மேக்ரான், ஐரோப்பாவில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட ஒரு உயர்மட்ட கூட்டத்திற்கு பரிந்துரை செய்தார்.

இதற்கு புதின் சம்மதித்த நிலையில், உக்ரைன் மீது படையெடுப்பை நடத்தாமல் இருந்தால், புதினை சந்திப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து புதினும், பைடனும் விரைவில் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதின் - பைடன் சந்திப்பு போரை தவிர்ப்பதற்கான இறுதி முயற்சியாக கருதப்படுகிறது.

ukrai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe