Advertisment

ஜப்பானின் புதிய பிரதமர் அறிவிப்பு குறித்த தகவல் வெளியீடு...

japan's new pm may be announced in fortnight

ஜப்பானின் புதிய பிரதமர் செப்டம்பர் 17 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Advertisment

கடந்த 2006 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற ஷின்சோ அபே, பதவியேற்ற ஒரு ஆண்டில் உடல்நலக் கோளாறு காரணமாகப் பதவி விலகினார். அதன்பின்னர் மீண்டும், 2012 ஆம் ஆண்டு அந்நாட்டின் பிரதமராக அவர் பொறுப்பேற்றார். கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் பிரதமராகச் செயல்பட்டுவந்த அவர், சமீபகாலமாகப் பெருங்குடல் அழற்சி காரணமாக அதிகமாக அவதிப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி காரணமாகப் பதவி விலகுவதாக அபே கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Advertisment

இதனையடுத்து, உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடான ஜப்பானின் பிரதமராக யார் பொறுப்பேற்பார் என்ற ஆர்வம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், ஜப்பானின் புதிய பிரதமர் செப்டம்பர் 17 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆளும்கட்சியின் பொதுக்குழு செப்டம்பர் 1 ஆம் தேதி கூடும் நிலையில், செப்டம்பர் 13 மற்றும் 15 ஆம் தேதிக்குள்ளாகக் கட்சியிலிருந்து பிரதமரைத் தேர்ந்தெடுத்து 17 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Japan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe