/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2761.jpg)
ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஜப்பான் முன்னாள் பிரதமர்ஷின்சோஅபே(67), மேற்கு ஜப்பானில் உள்ள நாரா எனும் இடத்தில் வெள்ளிக்கிழமைபொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே சரிந்த முன்னாள் பிரதமர்ஷின்சோஅபேவைஉடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள்மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில்அவருக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3318.jpg)
முன்னாள் பிரதமர்ஷின்சோஅபேவைசுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்ற 40 வயது மதிக்கத்தக்க நபரை உடனடியாகஷின்சோஅபேவின்பாதுகாப்பு அதிகாரிகள்துரத்திபிடித்தனர்.பிடிபட்டஅந்த நபரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். துப்பாக்கிச் சூட்டால் கீழே விழுந்தஷின்சோஅபேவைமீட்கப்படும்போதே அவரிடம் இருந்த எந்த அசைவுகளும் இல்லைஎனச்சொல்லப்படுகிறது. மேலும், இந்தத் துப்பாக்கிச்சூட்டைதொடர்ந்து அவருக்கு மார் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்தகவல்கள்தெரிவிக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)