இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜப்பான் நாட்டிலும்கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, ஏற்கனவே திட்டமிடபட்டிருந்ததனது இந்திய, பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக அந்தநாட்டுஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கு பதிலாக பிரதமர் யோஷிஹைட் சுகா, ஜப்பானில் மீண்டும் அதிகரித்து வரும் கரோனாவைகட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடப்போவதாக ஜப்பான் ஊடகங்கள் கூறியுள்ளன. ஏற்கனவே கரோனாஅதிகரிப்பு எதிரொலியால், இங்கிலாந்து பிரதர் போரிஸ் ஜான்சனின்இந்தியபயணம் ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.