ADVERTISEMENT

60 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான மழைக்கு வாய்ப்பு... நெருங்கி வரும் ஹகிபிஸ் புயலால் அச்சத்தில் ஜப்பான் மக்கள்...

03:59 PM Oct 11, 2019 | kirubahar@nakk…

சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் இவ்வார இறுதியில் ஜப்பானைத் தாக்க உள்ள நிலையில், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மோசமான மழையை அந்நாடு சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடான ஜப்பான் நிலநடுக்கம், புயல் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்கலால் பல முறை கடுமையான அழிவுகளை சந்தித்துள்ளது. ஹகிபிஸ் புயல் இந்த வார இறுதியில் கரையை கடக்க உள்ள நிலையில், இதனால் அதிகப்படியான கனமழை, அதிவேகமான மோசமான காற்று, நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் என அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஜப்பானில் 1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயலுக்குப் பின், அந்நாடு சந்திக்கப்போகும் மிகப்பெரிய புயலாக இது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜப்பான் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதோடு, பொதுமக்களை போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதன்காரணமாக ஜப்பானில் அச்சமுடன் கூடிய பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT