பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

Advertisment

japan bans smoking in public places

பள்ளிக்கூடங்கள், கல்லூரி, மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இனி யாரும் புகைபிடிக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்படி புகைப்பிடித்தால் அபராதமாக 3 லட்சம் யென் அபராதமாக விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் ஆகும்.

Advertisment

அதுபோல பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் ஆகியவை புகைப்பிடித்தலை அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி இந்த நிர்வாகங்கள் தங்கள் இடங்களில் புகைபிடிக்க அனுமதித்தால், அந்த நிர்வாகத்திற்கு 5 லட்சம் யென் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.