mallaya

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

விஜய்மல்லையாகடன்மோசடி வழக்கில் மும்பை சிறை பற்றியவீடியோ சமர்பிக்கப்படவேண்டும் என பிரிட்டன் நீதிபதி இந்திய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisment

இந்திய வங்கிகளில் 9000 கொடிக்கும்மேல் கடன்வாங்கி அவற்றை திரும்ப செலுத்தமுடியமல் லண்டனுக்கு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்கள் முடக்கப்பட்டு பறிமுதல் செய்ய இருப்பதாக பிரிட்டன் கோர்ட் தெரிவித்திருந்தது.

அண்மையில் இந்திய கடன் மீட்பு தீர்பாணையம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பைரன், பிரிட்டனிலுள்ள மல்லையாவின் சொத்துக்களை ஆய்வு செய்யவும் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து லண்டனுக்கு அருகிலுள்ள ஹேர்ட்போர்டுஷர் பகுதியிலுள்ள விஜய் மல்லையாவிற்கு சொந்தமான வீடுகள் மற்றும் விடுதிகள் ஆகியற்றை அமலாக்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பறிமுதல் செய்ய திட்டமிட்டுருந்த நிலையில் இன்று வேஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் மல்லையா ஆஜரானார். அதேபோல் இன்று நடந்த இந்த வழக்கு விசாரணையில் இந்திய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் முதல்முறையாக கலந்துகொண்டனர்.

Advertisment

இந்த விசாரணையின் பொழுது நீதிபதி மல்லையாவிற்கு செப்டெம்பர் 12-ஆம் தேதி வரை ஜாமின் வழங்கினார். மேலும்மும்பை ஆர்தர் சிறையில் உள்ள வசதிகள் குறித்த வீடியோ சமர்பிக்கப்படவேண்டும் என இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் மல்லையா நாடுகடத்தப்படாலம் என எதிர்பார்க்கப்படுகிறது.