உலகம் முழுவதும் வெப்பமயமாதல் அதிகரித்து வரும் நிலையில், கடல் மட்டமும் உயர்ந்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடல்மட்டதால் விரைவில் உலகின் பல பகுதிகள்கடலுக்குள் மூழ்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jakartha.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனை மெய்ப்பிக்கும் வகையில் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்தா வேகமாக கடலுக்குள் மூழ்கி வருவதாக தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 8 அடி அளவு இந்த நகரம் கடலுக்குள் மூழ்கியுள்ளது. இப்படியே சென்றால் 2050 ஆம் ஆண்டுக்குள் அந்த நகரம் முழுவதும் நீருக்குள் மூழ்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 கோடி பேர் வசிக்கும் அந்த நகரத்தில், மக்களை வேறு இடங்களுக்கும் குடிபெயர வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் நாட்டின் தலைநகரத்தையும் ஜகார்தாவிலிருந்து ஜாவா தீவிற்கு மாற்றும் திட்டத்தையும் கையிலெடுத்துள்ளது அந்நாட்டு அரசு.
வெப்பமயமாதல் குறித்த விவாதங்கள் உலகம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில் ஜகார்தாவின் இந்த நிலை சுற்றுசூழல் மேம்பாடு குறித்த ஒரு இறுதி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)