ADVERTISEMENT

'இராமாயண' மேற்கோள் காட்டி பிரதமர் மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்...!

01:09 PM Apr 08, 2020 | kirubahar@nakk…


அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரைக் காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களைக் காக்க வேண்டும் எனப் பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா வைரசால், சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,000-ஐ கடந்துள்ளது. மேலும், 3,02,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்நிலையில் கரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது.

இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும்,மருத்துவ ஊழியர்கள் கரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயினை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தது.இந்த அறிவிப்பை அடுத்து ஹைட்ரோகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடியுடன் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.அமெரிக்கா இன்றி மற்ற சில உலக நாடுகளும் இதே கோரிக்கையை வைத்தன. இதனையடுத்து ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு இருந்த தடையை மத்திய அரசு நேற்று தளர்த்தியது.

இதனையடுத்து, இராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரேசில் அதிபர் இந்தியப் பிரதமருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரைக் காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களைக் காக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT