ADVERTISEMENT

நோபல் பரிசு பெற்றவருக்கு சிறை தண்டனை!

10:54 PM Jan 01, 2024 | prabukumar@nak…

நோபல் பரிசு பெற்றவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் வங்கதேசத்தில் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

வங்கதேசத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் (வயது 83) ஆவார். இவர் வறுமை ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக கடந்த 2006 ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இவர் கிராமீன் டெலிகாம் தலைவராக இருந்தபோது தொழிலாளர் சட்டத்தை மீறியதாக முகமது யூனுஸ் உள்ளிட்ட 3 பேர் மீது தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் உள்ளிட்ட 4 பேருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனையுடன் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தண்டனை பெற்ற 4 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் ஒரு மாதம் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT