எகிப்து பிரமிடு மீது ஏறிய பிரபல நபருக்கு 5 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்தவர் விட்டலி ஸ்டோ. இவர் பிரபலமான யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான மக்கள் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள்.

Advertisment

இவர் தன்னுடைய அதீத சாசக திறமையால் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்து வருகிறார். சமீபத்தில் எகிப்து என்ற இவர் அங்குள்ள பிரமிடு மீது ஏறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவருக்கு 5 நாள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், நான் எகிப்து நாட்டை அவமதிக்கும் எண்ணத்தில் அவ்வாறு செய்யவில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் அவ்வாறு சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.