Advertisment

கரோனா பரவல்: பதவி விலகும் பிரதமர்கள்!

italy pm

இத்தாலி நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி சார்பாக கியூசெப் கோண்டே இத்தாலி நாட்டு பிரதமராக இருந்து வந்தார். இந்நிலையில், கரோனா தொற்றை சரியாக கையாளவில்லை என குற்றஞ்சாட்டி, முன்னாள் பிரதமர் தலைமையிலான கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறியது.

Advertisment

இதனால் இத்தாலி நாடாளுமன்றத்தின் மேலவையில் கியூசெப் கோண்டேவுக்கு ஆதரவு குறைந்தது. மேலவையில் பெரும்பான்மை இருந்தும், அது போதுமான அளவில் இல்லை. இதனைத் தொடர்ந்து, இத்தாலி பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேநேரம், வேறு கட்சியுடன் கூட்டணி அமைத்து, மீண்டும் கியூசெப் கோண்டேவே பிரதமராகலாம் எனவும் கூறப்படுகிறது.

Advertisment

கியூசெப் கோண்டே கரோனா தொற்று பரவல் காரணமாகபதவி விலகும் இரண்டாவது அதிபராவர். ஏற்கனவே கரோனாபாதித்த தாய் ஒருவரைசரியாககையளவில்லை என எழுந்தபோராட்டதையடுத்து, மங்கோலியபிரதமர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

corona virus italy pm italy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe