இத்தாலிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டபோது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெற்று மரியோ டிரோகி நாட்டின் பிரதமரானார். ஆனால் அப்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கூட்டணிக் கட்சிகள் மரியோ டிரோகிக்கு வழங்கி வந்த ஆதரவைத்திரும்பப் பெற்றதால், அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமாசெய்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தீவிர வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சி சார்பில் போட்டியிட்ட ஜார்ஜியா மெலோனி(45) வெற்றி பெற்று பிரதமராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தாலி வரலாற்றில் மெலோனி முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.
இந்த நிலையில், தனது காதல் கணவரான ஆண்டிரியா கியாம்புருனோவை மெலோனி பிரிவதாக அறிவித்துள்ளார். பத்திரிகையாளரான ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ தொலைக்காட்சியில் டெய்லி டைரி என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி வருகிறார். திருமணம் செய்து கொள்ளாமல் பிரதமர் மெலோனியாவும், ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவும் 10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த ஜோடிக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இதனிடையே சமீபத்தில்தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் பேசிய ஆண்டிரியா ஜியாம்ப்ருனோ, சக பெண் ஊழியரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய வார்த்தைகளைஉபயோகித்ததாகக்கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இன்று பிரதமர் மெலோனி தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது காதல் கணவரைப் பிரிவதாக அறிவித்துள்ளார். மேலும் அந்தப் பதிவில் மகள் தந்தையுடன் செல்ல விருப்பம் தெரிவித்தால், அனுப்பி வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.