'It saddens him not to be featured' - OPS

Advertisment

நாகை மாவட்டம் உருவான விதம் குறித்த கண்காட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நாகை மாவட்ட தொடக்க விழாவில் கலந்துகொண்ட புகைப்படத்தை வைக்காதது வரலாற்றைத் திருத்துவதற்குச் சமம் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாகை மாவட்டம் உருவான விதம் குறித்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டமாக நாகைஉருப்பெற்றதற்குப்பின் அங்கு நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், நாகை மாவட்டத்தின்சிறப்புகள் அந்தகண்காட்சியில்புகைப்படத்தொகுப்புகளாக வைக்கப்பட்டுள்ளது. அந்த கண்காட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெறாதது குறித்த தகவல் வெளியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெறாதது தனக்கு வேதனை அளிப்பதாக ஓபிஎஸ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், நாகை மாவட்ட தொடக்க விழாவில் ஜெயலலிதா கலந்துகொண்ட புகைப்படத்தை வைக்காதது வரலாற்றைத் திருத்துவதற்குச் சமம். எனவே கண்காட்சியில் அவரது புகைப்படத்தை இடம்பெறச் செய்யவேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார் ஓபிஎஸ்.