டெல்டா வகை கரோனாவை விட மிக ஆபத்தானது என கருதப்படும் ஒமிக்ரான்கரோனா முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நாடானதென்னாபிரிக்காவில், கரோனாபாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில்செவ்வாய் கிழமை 4,373 பேருக்கு கரோனாஉறுதியாகிருந்தநிலையில், புதன்கிழமை 8561 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது.
அதேபோல் கடந்த வாரத்தில் உறுதியான கரோனாபாதிப்புகளின் எண்ணிக்கையைவிட இந்த வாரம் 571 சதவீத அதிக கரோனாபாதிப்புகள் உறுதியாகியுள்ளது. தற்போது அந்தநாட்டில் கரோனா பாதிப்புகள் உயர்ந்து வருவதற்குஒமிக்ரான்கரோனாகாரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்தநிலையில்ஒமிக்ரான்குறித்து தென்னாபிரிக்காநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்த அந்தநாட்டின்தேசிய தொற்றுநோய் நிறுவன நிபுணர்கள், ஒமிக்ரான் கரோனா லேசான பாதிப்பதைத்தான்ஏற்படுத்தும் என தற்போது தீர்மானிக்க முடியாது. ஒமிக்ரான் தற்போது அதிக இளம் வயதினரையேபாதிப்பதால், அதனுடையஉண்மையான தாக்கத்தை கண்டறிவது தற்போதைக்கு கடினமாக உள்ளது. ஏனெனில் இளம் வயதினரால் நோய்க்கிருமிகளை எதிர்த்துபோராட முடியும் என கூறியுள்ளனர்.