ஈரான் - இஸ்ரேல் இடையே உச்சக்கட்ட பதற்றம் - மகனின் திருமணத்தை நிறுத்திய நெதன்யாகு!

Israeli PM Netanyahu's son Avner Netanyahu's wedding postponed

கடந்த 15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வரும் சூழ்நிலையில், ஈரானில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறி ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 78 உயிரிழந்தனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் குறிவைத்து நடத்திய தாக்குதலில், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹொசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக முக்கிய தகவல் வெளியானது.மேலும், இதில் பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என்று உள்ளூர் ஊடகம் கூறியிருக்கிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தாக்குதலை நிறுத்தாவிட்டால், டெஹ்ரான் பற்றி எரியும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மத்திய கிழக்கு பகுதிகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக இஸ்ரேல் பிதமரின் மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் அவ்வெனர் நெதன்யாகுக்கும் அமித் யார்தேனிக்கும் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இஸ்ரேல் ஈரான் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் தனது மகனின் திருமணத்தை நெதன்யாகு ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

iran israel benjamin nethanyagu
இதையும் படியுங்கள்
Subscribe