Advertisment

பதிலடி தாக்குதல் நடத்தும் ஈரான்; இஸ்ரேலின் எச்சரிக்கையால் போர் பதற்றம்!

 Israel warning to Iran Tehran  will burn

15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வரும் சூழ்நிலையில், ஈரானில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முன் தினம் திடீர் தாக்குதல் நடத்தியது.

Advertisment

ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறி ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 78 உயிரிழந்தனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹொசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.மேலும், இதில் பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என்று உள்ளூர் ஊடகம் கூறியிருக்கிறது. இந்த சூழலில், ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது.

Advertisment

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் நேற்று நள்ளிரவு முதல் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தாக்குதலை நிறுத்தாவிட்டால், டெஹ்ரான் பற்றி எரியும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியதாவது, ‘இஸ்ரேல் மீது ஈரான் மேலும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினால் டெஹ்ரான் பற்றி எரியும். ஈரானிய சர்வாதிகாரி ஈரான் குடிமக்களை பணயக்கைதிகளாக மாற்றுகிறார், மேலும் இஸ்ரேலிய பொதுமக்களுக்கு குற்றவியல் தீங்கு விளைவிப்பதால், தெஹ்ரானில் வசிப்பவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டிய ஒரு யதார்த்தத்தை கொண்டு வருகிறார். இஸ்ரேலிய வீட்டு முன்பக்கத்தை நோக்கி ஏவுகணைகளை தொடர்ந்து வீசினால் டெஹ்ரான் எரியும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் த்திய கிழக்கு பகுதிகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

iran israel tension war tension
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe