Advertisment

"மீண்டும் மீண்டுமா?" - நான்காவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் முடிவு!

israel

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனாபாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கரோனாபாதிப்பு அதிகரிக்க ஒமிக்ரான்மிக முக்கிய காரணமாக இருந்துவருகிறது. இந்நிலையில், கரோனாபரவலைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகள்மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திவருகின்றனர். மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆலோசித்துவருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இஸ்ரேல், நான்காவது டோஸ் தடுப்பூசியை செலுத்த முடிவு செய்துள்ளது. அந்த நாட்டுசுகாதாரத்துறையின் நிபுணர்குழு, ஐந்தாவது கரோனாஅலைக்குத் தயாராகும் விதமாக,60 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு நான்காவது டோஸ் தடுப்பூசியை செலுத்த பரிந்துரைத்துள்ளது.

Advertisment

இந்தப் பரிந்துரையை இஸ்ரேல் நாட்டு பிரதமரும்வரவேற்றுள்ளார். சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் ஒப்புதல் அளித்ததும்இந்தப் பரிந்துரைகள் அமலுக்கு வரவுள்ளன.மூன்றாவது டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டஒருமாதத்தில் நான்காவது டோஸ் செலுத்திக்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VACCINE israel
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe