Advertisment

“காசா மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம்” - இஸ்ரேல் தகவல்

Israel Information We are providing the necessary assistance to the people of Gaza

Advertisment

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

இதனையடுத்து, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிகப் போர் நிறுத்தம் கடந்த 1 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போருக்கு சர்வதேச அளவில் அழுத்தமும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹாஹரி கூறியதாவது, “காசாவில் மனிதாபிமான அடிப்படையில் கூடுதல் உதவிகள் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உலகளாவிய அமைப்புகள் கோரிக்கைகள் வைத்து வருகின்றன. எங்களது போர் ஹமாஸுக்கு எதிரானதுதான். காசா மக்களுக்கு எதிரானது அல்ல. நாங்கள் காசா மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதில் நாங்கள் தடையாக இல்லை” என்று தெரிவித்தார்.

israel palestine
இதையும் படியுங்கள்
Subscribe