Advertisment

இஸ்ரேலில் மீண்டும் ஊரடங்கு அமல்!!!

corona crowd

கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து இஸ்ரேலில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஊரடங்கு உட்பட பல தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டாலும் வைரஸ் பரவலின் வேகத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. ஊரடங்கை நீண்டநாள் அமல்படுத்தும்போது பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதனால் பல நாடுகள் அவர்கள் நாட்டின் பாதிப்பு எண்ணிக்கையை அடிப்படையாக வைத்துச் சில தளர்வுகளை அளித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் கடந்த மே மாதம் இஸ்ரேல் நாட்டில் அமலில் இருந்த ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும், அந்நாட்டு அரசு மருத்துவக் குழுவினரோடு ஆலோசித்து மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது என்று முடிவெடுத்தது. அதன்படி அக்டோபர் 9 -ஆம் தேதி வரை மூன்று வார காலத்துக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.55 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 1,119 ஆகப் பதிவாகியுள்ளது.

israel
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe