Advertisment

முகக்கவசம் அணிவதற்கு 'டாட்டா'! - கரோனாவிலிருந்து மீண்டெழுந்த தேசம்!

ISRAEL

உலகம் முழுவதும் கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உலகில் உள்ள பல்வேறு நாடுகளும், ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. கரோனாவிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதில்முகக்கவசம் பெரும் பங்கு வகிக்கிறது.

Advertisment

இந்தநிலையில்இஸ்ரேல் நாடு, பொதுவெளியில் முகக்கவசம் அணிவதிலிருந்து தம் மக்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இஸ்ரேலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்களுக்கு கரோனாதடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது அந்தநாடுதனது மக்கள் தொகையில், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாதடுப்பூசியைச் செலுத்தியுள்ளது. 61 சதவீதமக்களுக்கு கரோனாதடுப்பூசியின் ஒரு டோஸாவதுசெலுத்தப்பட்டுள்ளது. 53 சதவீதமக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸும்செலுத்தப்பட்டுள்ளது

Advertisment

மேலும் கடந்த ஜனவரி மாதத்தில்நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 200 பேருக்கு மட்டுமே தினசரி கரோனாஉறுதியாகி வருகிறது. எனவே பொதுவெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆனால் மூடப்பட்ட இடங்களில் மாஸ்க் கட்டாயம் என்ற விதி தொடர்கிறது. திறந்த வெளியை விட, மூடப்பட்ட இடங்களிலேயே கரோனாஅதிகம் பரவுமென்பதுகுறிப்பிடத்தக்கது.

பள்ளிகள், பார்கள், உணவகங்கள் ஆகியவற்றை மீண்டும் திறந்துள்ள இஸ்ரேல், தடுப்பூசி செலுத்திக்கொண்டசுற்றுலாப் பயணிகளையும்மே மாதம் முதல், தங்கள்நாட்டிற்குள்அனுமதிக்க இருக்கிறது. முகக்கவசம் பொதுவெளியில் அணிவது கட்டாயமில்லை என அந்தநாடுஅறிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் மக்கள் முகக்கவசம் அணியாமல் வீதிகளில் சுற்றித் திரிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

corona virus israel
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe