Skip to main content

சூப்பர் மார்க்கெட்டில் குண்டு வீசிய இஸ்ரேல்; கதிகலங்க வைக்கும் காட்சி

Published on 24/10/2023 | Edited on 24/10/2023

 

Israel beating supermarket in Gaza refugee camp

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 1 வாரத்திற்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது.

 

இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்து உயிரிழந்துள்ளதாகவும், குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 

 

இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி காசாவின் நசீரத் அகதிகள் முகாமில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இஸ்ரேல் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியுள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த விடியோவில் ஏராளமானோர் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த நிலையில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசிய காட்சிகள் பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று, அந்த சூப்பர் மார்க்கெட் கட்டிடம் பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்