ஆப்பிரிக்காவின்சாஹல் பகுதியில்புர்கினா பாசோ, சாட், மாலி, மொரிடானியா, நைஜர் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. முன்னர் ஃபிரான்ஸ் நாட்டின் காலனியாக இருந்த இந்நாடுகளில், தற்போது தலைதூக்கியுள்ள தீவிரவாதத்தை ஒடுக்கும் முயற்சியில் ஃபிரெஞ்சு இராணுவப் படைகள் ஈடுபட்டுள்ளன.
இந்தநிலையில், சஹாரா பகுதியில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைவனான அதான் அபு வாலித்அல்-சஹ்ரவி கொல்லப்பட்டுள்ளான். இதனை ஃபிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தங்கள் நாட்டைச் சேர்ந்த 4 இராணுவ அதிகாரிகளைத் தாக்குதல் நடத்திக் கொன்றதற்காக, தற்போது கொல்லப்பட்டுள்ளஅதான் அபு வாலித் அல்-சஹ்ரவியின் தலைக்கு அமெரிக்கா 5 மில்லியன் டாலர் விலை நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஆண்டு ஆறு ஃபிரெஞ்சு தொண்டு நிறுவனஊழியர்களையும், அவர்களின் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஓட்டுநரையும்கொல்ல அட்னான் அபு வாலித் அல்-சஹ்ரவிதனிப்பட்ட முறையில் உத்தரவு பிறப்பித்ததாக ஃபிரான்ஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.