Skip to main content

அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 300 பேர் பலி...

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

இராக் நாட்டில் கடந்த மாதத் தொடக்கத்திலிருந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது தற்போது அது பெரியளவில் உலக கவனம் ஈர்த்துள்ளது.
 

iraq

 

 

இராக்கில் ஊழல், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகவும், அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தி இந்த போராட்டங்கள் இராக்கில் நடைபெறுகிறது.
 

இந்நிலையில் பாக்தாத்தில் சனிக்கிழமை முதல் நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் இராக் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர், 100க்கும் மேற்பட்டோர் விரட்டியடிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் தங்க பயன்படுத்திய டெண்டுகள் தீ வைக்கப்பட்டன.
 

இந்த போராட்டங்களின் காரணமாக தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இராக்கின் மனித உரிமைகளுக்கான இண்டிபெண்டன் உயர் கமிஷன் தெரிவித்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவின் குதிரை பேரம்; பறந்த ஜார்க்கண்ட் எம்.எல்ஏக்கள்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
BJP's Horse Bargain; Jharkhand MLAs who flew to Hyderabad

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர்ந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று 7 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய முதலமைச்சராக பதவியேற்க தீவிரம் காட்டி வரும் சம்பாய் சோரனை ஆளுநர் இதுவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இந்நிலையில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், விமானம் மூலம் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். முக்தி மோர்ச்சா கட்சி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஜக குதிரை பேரம் நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Next Story

திருமண நிகழ்ச்சியில் தீ விபத்து -100 பேர் உயிரிழப்பு

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

fire at wedding ceremony

 

திருமண நிகழ்ச்சி ஒன்றில் திடீரென திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்த சம்பவம் ஈராக்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அல் ஹம்தனியா நகரத்தில் தடபுடலாக திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நூறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.