அணு ஆயுத ஒப்பந்த விவகாரம், பொருளாதார தடை என அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கிடையே மோதல் நிகழ்ந்துவரும் நிலையில் டிரம்ப் குறித்து ஈரான் நாட்டை சேர்ந்த முக்கிய மத தலைவரான அயதுல்லா காமேனி டிரம்ப் குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஈரான் உறவு குறித்தும், டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் பேசிய அவர், "ட்ரம்ப்பை பார்க்கும்போது தகவல்களை பறிமாறிக் கொள்வதற்கு தகுதியான நபராக எனக்கு தெரியவில்லை. என்னிடம் அவருக்கு பதில் அளிப்பதற்கு ஒன்றும் இல்லை" என கூறினார். டிரம்ப் குறித்து அவர் இவ்வாறு பேசியுள்ளது அவ்விரு நாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.