iran pakistan border issue in iran  

பாகிஸ்தான்எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்4 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகி உள்ளனர்.

Advertisment

ஈரான் நாட்டின் தெற்குபகுதியில்பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிராமம் சரவண். இங்கு ஈரான் பாதுகாப்புப் படை வீரர்கள் வழக்கம்போல் தங்களது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்கள் மீது திடீரெனதுப்பாக்கிச் சூடுநடத்தினர். கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றதால் பாதுகாப்புப் படைவீரர்கள் சமாளிப்பதற்குள்பயங்கரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்.

Advertisment

இந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூடு சம்பவத்தால்பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தத்தாக்குதலில் மேலும் பல வீரர்கள்காயம் அடைந்துள்ளனர். இந்தத்தாக்குதலுக்கு இதுவரைஎந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தால் ஈரான், பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.