ஈரானில் புஷேர் அணுமின் நிலையம் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

Advertisment

pusher

இந்த அணு உலையிலிருந்து 53 கிமீ கிழக்கே நிலநடுக்கும் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.23 மணியளவில் இந்த பூகம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 38 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 2003ம் ஆண்டு 6.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் ஈரானிலுள்ள பாம் என்ற நகரம் தரைமட்டமானது. சுமார் 26,000 பேர் இதில் பலியாகினர். பாம் நகரம் புஷேர் அணு உலைக்கு அருகில்தான் உள்ளது, ஆனால் 2003 சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் அணு உலைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.