Advertisment

அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல்!

Iran incident US military base

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஈரானில் அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாகவும் குற்றம்சாட்டி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே அமெரிக்கா ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி தளவாடங்களை குறிவைத்து வான்வளி தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் நிச்சயமாக நாங்கள் பதிலடி கொடுத்தோம். அமெரிக்கா ஒரு மோசமான பின்விளைவை சந்திக்கும் என்றும் ஈரான் தரப்பில் எதிர்க்கப்பட்டிருந்தது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் தனது அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் குறி வைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கத்தார் தலைநகர் டோகாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் ஏவுகனை மூலம் தாக்கல் நடத்தியுள்ளது. இதுமட்டுமின்றி கத்தாரில் வான் பரப்பு ஏற்கனவே மூடப்பட்டிருக்கிறது. அதே சமயம் ஈரானின் மற்றொரு ஆண்டை நாடான ஐக்கிய அரபு அமீரகத்திலும் வான் பரப்பு மூடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதோடு ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அதாவது ஈரானின் அணுசக்தித் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment
America israel iran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe