/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hi_10.jpg)
ஈரானில் நடைபெற்றுவரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காககைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நடிகைதற்போதுவிடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி உறவினர்களைச் சந்திக்க சென்ற 22 வயதான மாஸா அம்னி என்ற பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று கைது செய்யப்பட்டார். பின்னர் சிறப்புப் படை காவல் அதிகாரிகளால் கொடூரமாகத்தாக்கப்பட்ட அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலைஅவரது பெற்றோரிடம் கொடுக்காமல் காவல்துறையினரே அடக்கம் செய்ததற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத்தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அப்பெண்ணின் மரணத்திற்கு காரணமான ஹிஜாப் ஆடை கண்காணிப்பு சிறப்புக் காவல் படையைநீக்கி ஈரான் அரசு உத்தரவிட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/iran-actress.jpg)
இதற்கிடையில், தொடர் போராட்டத்தின் போது ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஈரான் நாட்டைச் சேர்ந்த நடிகையான தரனே அலி டோஸ்டிகடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்,இவரைஈரான் அரசு சிறையில் இருந்து விடுவித்தது. நடிகைதரனே அலி டோஸ்டிகடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "தி சேல்ஸ்மேன்" என்ற படத்திற்காகஆஸ்கர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)