ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

iran goverment tv channel about america issue

Advertisment

Advertisment

இந்தநிலையில், ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் உள்ள அல் ஆசாத், இர்பில் விமானப்படை தளங்கள் மீது 10- க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவும் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியது. இந்நிலையில் இந்த தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. ஈரான் தாக்குதலில் உயிரிழப்புகள் இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஈரான் இந்த செய்தியை வெளியிட்டது.

மேலும் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், ஈரான் மேலும் 100 இலக்குகளை குறிவைக்கும் என்று புரட்சிகர காவல்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை மிரட்டும் விதத்திலான இந்த செய்தி வளைகுடா மற்றும் அமெரிக்க பகுதிகளில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.