ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் உள்ள அல் ஆசாத், இர்பில் விமானப்படை தளங்கள் மீது 10- க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈராக் தாக்குதல் நடத்தியதை அமெரிக்கா உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, இந்தியா வாங்கும் பிரெண்ட் கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 4% அதிகரித்து 71 டாலரானது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் மற்றும் தங்கத்தின் விலை உயர வாய்ப்பிருப்பதாக தகவல் கூறுகின்றனர்.