Investors Conference in Spain; Chief Minister M.K. Stalin's participation

ஸ்பெயினில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

Advertisment

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ஸ்பெயினில் இன்று (29.01.2024) நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களைச் சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

Advertisment

முன்னதாக தமிழக அரசின் சார்பில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.