ADVERTISEMENT

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டவர்க்கான விதிமுறையை மாற்றிய ஆஸ்திரேலியா

12:57 PM Feb 07, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்ட சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. ஆஸ்திரேலியா குடிமக்கள், புலம்பெயர்ந்தவர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டன.

இந்த நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன், கரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திய, அதாவது தடுப்பூசியின் இரண்டு தவணையையும் செலுத்திய சுற்றுலா பயணிகளை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். சர்வதேச சுற்றுலா பயணிகள் வரும் பிப்ரவரி 21- ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு வர அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 21- ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுலா தலங்கள் முழுமையாகத் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அரசின் அனுமதியால் அந்நாட்டுக்கு சுற்றுலா வரும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை வரும் நாட்களில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT