Advertisment

"தீவிரமான கரோனா அலை" - இந்தியாவிற்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எச்சரிக்கை!

CORONA

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூலின் பேராசிரியர் பால் கட்டுமானும் அவரது குழுவினரும், இந்தியா கோவிட் ட்ராக்கரைஉருவாக்கி, இந்திய கரோனாபாதிப்புகளை கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில்அவர்கள், இந்தியாவில் தீவிரமான அதேநேரத்தில் குறுகிய கால கரோனாஅலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

இதுதொடர்பாக பேராசிரியர் பால் கட்டுமான், தினசரி கரோனாபாதிப்புகள் அதிகரிக்கும் ஒரு கால கட்டத்தை இந்தியா காணும் எனவும், இந்த காலகட்டம் (முதலிரண்டு அலைகளை விட) ஒப்பீட்டளவில் குறைவானதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை சில நாட்களில் அதிகரிக்க தொடங்கலாம் என்றும், ஒருவாரத்திற்குள்பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கும் என்றும் பால் கட்டுமான்தெரிவித்துள்ளார்.

Advertisment

பால் கட்டுமான் மற்றும் குழுவினரின் இந்தியா கோவிட் ட்ராக்கர், இரண்டாவது அலை மே மாதத்தில் உச்சம் தொடும் என்பதையும், ஆகஸ்டில் கரோனாபாதிப்பு குறைய தொடங்கும் எனவும் சரியாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

India pandemic
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe