Skip to main content

ரஷ்யா சென்றடைந்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்... இந்திய சீனப் பிரச்சனை குறித்து பேசப்படுமா?

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

rajnath singh - india - minister

 

ரஷ்யாவில் நடைபெறும் 'ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு' நாடுகளின் மாநாட்டில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (02.09.2020) மாலை ரஷியா சென்றடைந்துள்ளார்.

 

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 'ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு' நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. இந்தக் கூட்டமைப்பில் சீனாவும் உள்ளது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் எல்லைப் பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில், இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அந்த மாநாட்டில் சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கலந்து கொள்ளவிருக்கும் சூழலில், ராஜ்நாத் சிங்கிற்கும் சீன அமைச்சருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் எனச் சொல்லப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப் பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தச் சுற்றுப்பயணத்தில் ராணுவ ஒத்துழைப்பு குறித்து ரஷிய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் பேசுவார் என கூறப்படுகிறது. செப்டம்பர் 10 -ஆம் தேதி நடைபெறவுள்ள 'ஷாங்காய் ஒத்துழைப்பு' அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் ரஷியா அழைப்பு விடுத்துள்ளது.

 

இந்நிலையில், ரஷ்யா சென்றடைந்த அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, ரஷ்ய மேஜர் ஜெனரல் புக்டீவ் யூரி வரவேற்று சக அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அதிகாரி ஒருவர் ராஜ்நாத் சிங்கிற்கு கை கொடுக்க முயன்றார், கரோனா அச்சத்தால், ராஜ்நாத் சிங் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் அங்கு சிரிப்பலை எழுந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“காங்கிரஸ் டைனோசரை போன்று இன்னும் சில ஆண்டுகளில் அழிந்துவிடும்” - ராஜ்நாத் சிங்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Congress will be extinct like a dinosaur in a few years says Rajnath Singh
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.

ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காக்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாநில கட்சிகளை சேர்த்து பாஜக என்.டி.ஏ கூட்டணியையும், எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் இந்தியா கூட்டணியையும் அமைத்து வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் என்று சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளையும், காங்கிரஸ் கட்சி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

இந்த நிலையில், டைனோசர் போன்று காங்கிரஸ் கட்சியும் இன்னும் சில காலங்களில் அழிந்துவிடும் என்று பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தராகாண்டில் கவுச்சார் நகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் தினமும் சண்டைபோட்டு கொள்கின்றனர். டைனோசர் போன்று இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி அழிந்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் என்ற பெயரை கூறினால், குழந்தைகள் யார் அவர்கள்? என்று கேட்பார்கள் எனக் கடுமையாக சாடியிருக்கிறார்.