Advertisment

15 ஆண்டுகளாக குகையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதி.... 

cave

Advertisment

இந்தோனேசியாவில் வசித்து வரும் தம்பதி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தங்களது 13 வயது பெண்ணுக்கு பேய் பிடித்துவிட்டது என்று ஷாமன் என்னும் மந்திரவாதியை பார்த்துள்ளனர். அதன் பின் அந்த பெண் காணவில்லை, இதைப்பற்றி மந்திரவாதி, அந்த பெண் வேலைக்காக ஜகார்தா நகருக்குச் சென்றுவிட்டாள் என்று பெற்றோரை சமாளித்துள்ளார். இதனையடுத்து அந்த மந்திரவாதி அந்த பெற்றோர்களை தொடர்புகொள்ளாமலே இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் ஷாமன்(தற்போது 83வயது) மந்திரவாதி வீட்டுக்கு அருகில் இருக்கும் குகையில் இருந்து ஒரு 28 வயது பெண் மீட்கப்பட்டிருக்கிறார். விசாரணையில், மந்திரவாதி ஆம்ரின் என்ற சிறுவனின் ஆவி தனக்குள் புகுந்திருக்கிறது. அவன் உன் ஆண்மகன் என்று நம்ப வைத்து 15 வருடம் குகையில் வைத்து மந்திரவாதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணை காலையில் குகையிலும், இரவில் தன் வீட்டு அருகே இருக்கும் குடிசையிலும் தங்கவைத்துள்ளார். அப்பெண் கற்பம் ஏற்படாமல் இருக்க பலமுறை மாத்திரைகள் கொடுத்துள்ளதாகவும் சொல்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து காவல்துறை அவரின் மீது வழக்குத்தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் மந்திரவாதிக்கு 15 வருட சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது. கிராமத்தில் பிரபலமடைந்த அந்த மந்திரவாதியிடம் இதுபோன்று பலர் சிக்கி இருக்க கூடும் என அந்நாட்டின் பெண் வன்கொடுமைக்கு எதிரான தேசிய ஆணைய தலைவி சிதோரஸ் கூறியுள்ளார்.

Indonesia
இதையும் படியுங்கள்
Subscribe