Skip to main content

இந்தோனோசியாவில் சுனாமியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 429-ஆக அதிகரிப்பு

Published on 26/12/2018 | Edited on 26/12/2018


இந்தோனேசியாவின் கிரகடோவா எரிமலை கடந்த 23-ம் தேதி வெடித்துச் சிதறியது. இதனை தொடர்ந்து சுனாமி தாக்கியது. இந்த பேரிடரில் உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 429 ஆக உயர்ந்துள்ளது.

 

ii

 

 

 

கிரகடோவா எரிமலை வெடிப்பை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் மேற்கு ஜாவா, தெற்கு சுமந்தரா தீவுப் பகுதிகளின் கடற்கரையை சுனாமி அலைகள் தாக்கியது. இதனால் கடற்கரையோரம் இருந்த ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இடிந்து, இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர். இதில், மூன்று தினங்களுக்கு முன் 168 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வந்தது. இந்தநிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 429-ஆக அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ நேற்று தெரிவித்தார். மேலும் காயமடைந்த சுமார் 1,400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் காணாமல்போன 128 பேரை தேடும் பணியும் தொடர்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொட்டைப் பாக்கு கடத்தல்;ஒருவர் கைது

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

thoothukudi incident; import export

 

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர்கள் பெட்டியைப் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் 'பஞ்சு கந்தல்' என்ற பெயரில் மோசடியாக ஆவணங்கள் தயாரித்து கப்பல் மூலமாக இந்தோனேசியாவிலிருந்து கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இந்த சம்பவத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் ரவி பகதூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த் துறைமுகம் வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கண்டெய்னர் பெட்டிகள் வந்து இறங்கியது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கொட்டைப் பாக்குகளின் மதிப்பு 4 கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

Next Story

நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் ஊழல்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Adani company issue in coal import

 

நிலக்கரி இறக்குமதி செய்ததில் அதானி நிறுவனம் ஊழல் செய்தது அம்பலமாகியுள்ளது.

 

இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த ஊழல் குறித்து இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பைனான்ஸ் டைம்ஸ் என்ற இதழ் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை நிலக்கரி இறக்குமதி ஊழலில் அதானி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக பைனான்ஸ் டைம்ஸ் இதழ் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.

 

அதாவது இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையை இரு மடங்கு அதிகமாகக் காட்டி அதானி நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பைனான்ஸ் டைம்ஸ் இதழ் புகார் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் இருந்து அதானி நிறுவனம் இறக்குமதி செய்யும் நிலக்கரி நேரடியாக இந்தியாவிற்கு வந்து சேரும் நிலையில், துபாய், சிங்கப்பூர் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள 4 நிறுவனங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக ரசீதுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் 130 டாலருக்கு வாங்கப்படும் ஒரு டன் நிலக்கரி இந்தியாவிற்கு வந்து சேரும் போது இடைத்தரகர்கள் மூலம் 169 டாலராக விலை உயர்த்தப்படுகிறது என அந்த இதழ் தெரிவித்துள்ளது.