Advertisment

இந்தோனேஷியா வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத் தீ!

இந்தோனேசியாவில் சுமத்ரா, கலிமந்தன் மற்றும் போர்னியோ உள்ளிட்ட தீவுகளில், கடந்த சில நாட்களாக கடுமையான காட்டுத் தீ நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான காற்று மாசு நீடிக்கிறது. காற்று மாசு காரணமாக 400 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வான்வழிப் பயணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisment

INDONESIA FOREST INCIDENT AIR POLLUTION AFFECT IN SINGAPORE

கடந்த ஒருமாதமாக நிகழும் காட்டுத் தீயை அணைக்க சுமார் 9,000 ராணுவ வீரர்களை இந்தோனேசியா அனுப்பியுள்ளது. சுமார் 239 மில்லியன் தண்ணீர் இதுவரை காட்டுத் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதுவரை 5,062 தீ ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டுள்ளன என்றும் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தோனிஷியாவில் பற்றி எரியும் தீயின் தாக்கம், அதன் அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் உணரப்பட்டு வருகிறது. மலேசியாவுக்கு உட்பட்ட 16 மாநிலங்களில் 11 மாநிலங்களின் காற்றின் தரக்குறியீடு 101 முதல் 200 ஆக குறைந்து மிகமோசமான நிலையை உணர்த்தி வருகிறது.

Advertisment

INDONESIA FOREST INCIDENT AIR POLLUTION AFFECT IN SINGAPORE

இதேபோல் சிங்கப்பூரிலும், காற்றின் தரக்குறியீடு 151 ஆக குறைந்து, மோசமான நிலையை உணர்த்தியுள்ளது. இதையடுத்து காற்றின் தரம் சீராகும் வரை பொதுமக்கள் பெரும்பாலும் வீட்டுக்குள் நேரத்தை செலவிடும்படி சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது. இந்தோனேசியாவின் காட்டுத் தீயை அணைக்க மக்கள் மழை வேண்டி பிராத்தனையில் ஈடுபட்டனர்.அமேசான் காடுகளை தொடர்ந்து இந்தோனேசியாவில் உள்ள காடுகளில் காட்டுத் தீ பரவியுள்ளதால், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

MALASIYA singapore AFFECT IN MANY COUNTRIES incident forest Indonesia
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe