இந்தோனேசியா நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

fdg

இந்தோனேசியாவில் கடந்த சில வருடங்களில் எப்போதும் இல்லாத வகையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 56 பேர் பலியாகியுள்ளதாகவும், 700 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாகவும், மக்கள் வீடுகள் இன்றி சாலையோரங்களில் தவிப்பதாகவும் அந்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக சியாஞ்சுர் நகரம் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிவிரைவு மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இறப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்படுகிறது. பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையிலும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் அரசு சார்பில் வெளியிடப்படவில்லை.

earthquake
இதையும் படியுங்கள்
Subscribe